சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் நியமனம்
சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் நியமனம் ஜனாதிபதி உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டுக்கு வக்கீல் வி.லட்சுமிநாராயணன் என்பவரை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.
புதிய நீதிபதி வி.லட்சுமிநாராயணன், 1970-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி சென்னை யில் பிறந்தார். இவரது தந்தை ஆர்.எஸ்.வெங்கடாச்சாரி சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக பணியாற்றினார்.
1995-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்தார். பின்னர், சுப்ரீம் கோர்ட்டு, சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஐகோர்ட்டுகளிலும் வக்கீலாக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய மருந்து நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வக்கீலாக இருந்துள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான வழக்குகள், சிவில், கிரிமினல் வழக்குகள், அறிவுசார் சொத்துரிமை என்று ஏராளமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.