உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ராஜகோபுர நிலைகால் நடும் விழா

உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ராஜகோபுர நிலைகால் நடும் விழா நடந்தது.

Update: 2023-04-23 19:33 GMT

திசையன்விளை:

உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலைகொண்ட முழுவதும் கருங்கற்களாலான ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. ராஜகோபுர வாயில் நிலைகால் நடும் விழா நேற்று நடந்தது. வாயில் நிலைகால் 22½ அடி உயரம், 12½ அடி அகலத்தில் 108 சிவதாண்டவத்துடன் அழகிய வேலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து கோபூஜை, நிலைகால் கல்லுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அங்கவஸ்திரம் மற்றும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு கிரேன் மூலம் வாயிலில் நிறுத்தப்பட்டது.

விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், கவுரவ தலைவர் லங்கால்லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, துணைத்தலைவர் கனகலிங்கம், ராஜகோபுர கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி நாடார், மணி, சுந்தர், பாலகிருஷ்ணன், தேர் கமிட்டி செயலாளர் தர்மலிங்க உடையார், வணிகர் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், திசையன்விளை லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், ஸ்தபதி சந்தான கிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்