உத்தரபிரதேச சாமியாரின் உருவப்படம் எரிப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு சன்மானம் அறிவித்த உத்தரபிரதேச சாமியாரின் உருவப்படம் எரித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-05 19:17 GMT

சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா கண்டனம் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சன்மான அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் கோல்வால்க்கர், சாவர்க்கர், மோகன் பாகவத் ஆகியோரின் உருவப்படங்களை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட நிதி செயலாளர் சரவணன், திருவாடானை தொகுதி செயலாளர் வடிவேல், துணை செயலாளர் தேவராஜ், ராமநாதபுரம் துணை செயலாளர் சோனைமுத்து, நகர் செயலாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்