உதகை மலை ரெயில் சேவை வருகிற 16-ந்தேதி வரை ரத்து

தண்டவாளத்தின் கீழே அரிப்பு ஏற்பட்டுள்ளதால் உதகை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-11-09 15:37 GMT

கோப்புப்படம் 

கோவை,

நீலகிரி மலை ரெயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே, கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் சில நாட்களுக்கு முன்பு மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால், மலை ரெயில் சேவை சில தினங்கள் ரத்துசெய்யப்பட்டது. தொடர்ந்து தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர், மீண்டும் ரெயில் சேவை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-உதகை மலை ரெயில் சேவை வருகிற 16-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே துறை அறிவித்து உள்ளது. தொடர் மழை காரணமாக ரெயில் பாதையில் மண் சரிவு மற்றும் தண்டவாளத்தின் கீழே அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்