கூடுதல் வட்டி கேட்ட 2 பேர் மீது கந்து வட்டி தடை சட்டம் பாய்ந்தது

கூடுதல் வட்டி கேட்ட 2 பேர் மீது கந்து வட்டி தடை சட்டம் பாய்ந்தது

Update: 2023-06-20 19:26 GMT

முசிறி முதலியார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முசிறி சின்ன கொடுந்துறை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பவரிடம் 3 சதவீத வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் செலுத்தி வந்தார். கடந்த ஏப்ரல் 12-ந் தேதி கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராஜேஷ் குமார், மனைவி சசிகலாவுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்குவந்த ராஜேந்திரன், அவரது நண்பர் பன்னீர் செல்வம் ஆகியோர் மேலும் ரூ.4 லட்சம் வட்டி செலுத்த வேண்டும் என மிரட்டி விட்டு சென்றனராம். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் ராஜேந்திரன், அவரது நண்பர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்