பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
மஞ்சப்பை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக் கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்
கோவை
மஞ்சப்பை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக் கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-
மஞ்சள் பை
தமிழக முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இதற்காக தீவிர பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது மஞ்சள் துணி பை கொண்டு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.
கடை உரிமையாளர்கள்
கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கடைகள் தோறும் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் பொதுமக்கள் குப்பைகளை கொடுக்கும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் சாலைகள்
குப்பைகளை தரம் பிரிப்பதில் 50 சதவீதம் வெற்றி பெற்று உள்ளோம். மேலும் 50 சதவீதம் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவோம். கோவை வெள்ளலூரில் பிரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கு வழங்கப்படு வதுடன், கோவையில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.