ஊர்வசி செல்வராஜ் நினைவிடத்தில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை
ஊர்வசி செல்வராஜ் நினைவிடத்தில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜூவின் தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.ஊர்வசி எஸ்.செல்வராஜின் 14-வது ஆண்டு நினைவு தினம் சென்னை குயின்ஸ்லேன்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களை எம்.எல்.ஏ. வரவேற்றார். பாஸ்டர் ஆஸ்பான் ஆரம்ப ஜெபம் செய்தார். பாஸ்டர் லூக்காஸ் சேகர் துதி ஆராதனை நடத்தினார். பாஸ்டர் மனோஜ் தேவ செய்தி அளித்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு ஊர்வசி செல்வராஜ் நினைவு இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சி ஊர்வசி ெசல்வராஜின் மனைவியும், சென்னை ராஜம் குழுமத்தின் சேர்மனுமான டாக்டர் நளினி செல்வராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், புங்கன், சொரிமுத்துபிரதாபன், டாக்டர் ரமேஷ்பாபு, ஜெய்சீலன்துரை, நகர தலைவர்கள் சாயர்புரம் ஜெயக்குமார், கோவில்பட்டி அருண்பாண்டியன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், பொருளாளர் எடிசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அந்தோணி சுரேஷ், சாமுவேல், ஞானதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.