ஊர்வசி செல்வராஜ் நினைவு நாள்

ஏரலில் ஊர்வசி செல்வராஜ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.;

Update: 2023-07-05 18:45 GMT

ஏரல்:

முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் 14-வது ஆண்டு நினைவு நாள் நேற்று ஏரலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. ஏரல் காந்தி சிலை அருகில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், யூனியன் கவுன்சிலர் பாரத், பொருளாளர் அய்யம்பெருமாள், ஓ.பி.சி பிரிவு தலைவர் பிஸ்மி சுல்தான், ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் அன்புநவீன், நிர்வாகிகள் அந்தோணி காந்தி, காமராஜ் காந்தி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் 14-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் மெயின் பஜாரில் அவருடைய உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அவரது உருவப்படத்துக்கு ஆழ்வார் திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் பாலசிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு, ஆத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் சின்னத்துரை, வட்டார காங்கிரஸ் பொருளாளர் கதிரேசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்