ஊருணி தண்ணீர் நிறம் மாறியதால் பரபரப்பு

ஊருணி தண்ணீர் நிறம் மாறியதால் பரபரப்பு

Update: 2023-06-09 18:45 GMT

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நீராவி ஊருணியில் தேங்கி இருக்கும் தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென நிறம் மாறி இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஊருணிக்கு சென்று தண்ணீர் நிறம் மாறி இருப்பதை உறுதி செய்தனர். அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரியிடம் கேட்ட போது, நீராவி ஊருணியை சீரமைக்க வேண்டும் என்று ஒன்றிய தலைவர் முத்துலட்சுமியிடம் கோரிக்கை வைத்தோம். அவர் ஊருணியை நேரில் பார்வையிட்டார். அதன் பேரில் தற்போது ஊருணியை தூர்வாரி பராமரிக்க நிதி ஒதுக்கி உள்ளார். இந்த பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. அதே போல் ஊருணியில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை தடுக்கவும் போதிய வாருகால் வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. ஊருணி தண்ணீர் இப்படி திடீரென நிறம் மாற என்ன காரணம் என விசாரிக்கப்பட்டு வருகிறது. தண்ணீரில் ஏதாவது வேதிப்பொருட்கள் கலந்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைகிறோம். விரைவில் இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்