நெல்லை மலை நம்பி கோவிலில் உறியடி திருவிழா - ஆடல், பாடலுடன் உற்சாகமாக கொண்டாட்டம்
திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலில் ஆண்டு தோறும் உறியடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலில், ஆவணி கடைசி சனிக்கிழமையையொட்டி உறியடி திருவிழா நடைபெற்றது. மலை நம்பி கோவிலில் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழா, இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை முதலே பக்தர்கள் நம்பி ஆற்றில் புனித நீராடி, நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கண்ணன் உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடல், பாடலுடன் கூடிய உறியடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.