கோத்தகிரி அருகே கிருஷ்ணர் கோவிலில் உறியடி திருவிழா

கோத்தகிரி அருகே கிருஷ்ணர் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-22 14:02 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திப் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகன சப்பரத்தில் கிருஷ்ணர் வீற்றிருந்து கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை உறியடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் திம்பட்டி கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கிருஷ்ணப் பெருமானை வழிபட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்