ஊரணி பொங்கல் திருவிழா
ஏமப்பேர் முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேர் முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை பிடாரி செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கல் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பகல் 12 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் ஏமப்பேர் குளக்கரையில் இருந்து முத்துமாரியம்மன் சக்திவேல் நிகழ்ச்சியும் மற்றும் ஊரணி பொங்கல் படையல் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இரவு முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.