3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம்

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-09 20:29 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோவில்களில் உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உறியடி உற்சவம்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி, சக்கரபாணி சாமி, சாரங்கபாணி சாமி ஆகிய 3 பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா, 3 பெருமாள் கோவில்களிலும் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7-ந் தேதி உறியில் பானைக்கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் இரவு உறியடி உற்சவமும் நடந்தது.

சிறப்பு அலங்காரம்

முன்னதாக ராமசாமி கோவில் எதிரே ராமர், சக்கரபாணி சாமி கோவில் எதிரே சக்கரபாணி, சாரங்கபாணி சாமி கோவில் முன்பு சாரங்கபாணி சாமி ஆகிய 3 உற்சவர்களும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பின்னர், அந்தந்த கோவில்களின் எதிரே கட்டி தொங்கவிடப்பட்டிருந்த உறி பானையை அடித்து உடைத்தனர்.இதனைத் தொடர்ந்து, 3 கோவில்களிலிருந்து உற்சவர்கள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் சிவசங்கரி, சி.மகேந்திரன் மற்றும் கும்பகோணம் வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்