நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தல்

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-06-06 18:27 GMT

செந்துறை 

அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒன்றிய செயற்குழு கூட்டம் தளவாய் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரவளவன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கவிஞர் இளமாறன், அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில பொறுப்பாளர்கள் அன்பானந்தம், கருப்புசாமி, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சிறுகளத்தூர் கந்தன், பாலசிங்கம், அரியலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மருதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடு மற்றும் பொதுமக்கள் நலன் குறித்து பேசினர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அன்று அவர் பிறந்த மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் மணி விழா மாநாடாக நடத்த வேண்டும். செந்துறை பகுதிகளில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஆலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்