டேன்டீ நிர்வாகத்தை மூடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்- விவசாயிகள் பாதுகாப்பு நல சங்க மாநில தலைவர் அறிவிப்பு

டேன்டீ நிர்வாகத்தை மூடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்- விவசாயிகள் பாதுகாப்பு நல சங்க மாநில தலைவர் அறிவிப்பு;

Update: 2022-12-05 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அருகில் உள்ள சிங்கோனா (டேன்டீ) நிர்வாகத்தை மூடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சிங்கோனா டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், டேன்டீ நிர்வாகத்தை மூடும் பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் சென்னையில் உள்ள அரசு தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்