முத்து முனியாண்டவர் கோவிலில் ஊரணி பொங்கல் விழா

முத்து முனியாண்டவர் கோவிலில் ஊரணி பொங்கல் விழா

Update: 2022-07-24 20:06 GMT

பாபநாசம்

பாபநாசம் அருகே உள்ள உத்தாணியில் உள்ள முத்து முனியாண்டவர் கோவிலில் ஊரணி பொங்கல் விழா மற்றும் பால்குட காவடி ஆகியவை நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து, அபிஷேக-ஆராதனை நடந்தது. பி்ன்னர் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வீதி உலா வந்து கோவிலில் தங்களது நேர்க்கடன்களை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உத்தாணி கிராம மக்கள், லாரி தொழிலாளர்கள் சங்கத்தினர், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்