உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் தேரோட்டம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-09-18 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம் 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் ராமர் வணங்கிய பெருமையுடைய வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு சதுர்த்தி விழா நடந்தது. விழாவில் நேற்று மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணசெட்டியார், தேவகோட்டை குமார் என்ற அருணாசலம், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக கிருஷ்ணன், காந்தி அம்பலம், குமரய்யா அம்பலம், வெட்டுக்குளம் வாசுதேவன் மற்றும் மண்டகப்படியார்கள் ஆகியோர் முன்னிலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இரவு வீதி உலா நடைப்பெற்றது.

விழாவில் இன்று ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து மயில் காவடி, பால் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, பறவை காவடி எடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் விசாரணைதாரர் தேவதாஸ், சிவாச்சாரியார் சேகர் குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்