பட்டா ஊருணியை மேம்படுத்தும் பணி

வாசுதேவநல்லூர் ரூ.1.61 கோடியில் பட்டா ஊருணியை மேம்படுத்தும் பணி தொடங்கியது.

Update: 2023-04-10 06:00 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் ரூ.1.61 கோடியில் பட்டா ஊருணியை மேம்படுத்தும் பணி தொடங்கியது. இதனை கலெக்டர்- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

பட்டா ஊருணி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பட்டா ஊருணியை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.1.61 ேகாடியில் மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ஊருணியை சுற்றிலும் நடைமேடை மற்றும் காம்பவுண்டு சுவர் போன்றவை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடந்தது.

அடிக்கல் நாட்டினர்

விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்