பாவூர்சத்திரம் அருகே ஊருணி மேம்படுத்தும் பணி
பாவூர்சத்திரம் அருகே ஊருணி மேம்படுத்தும் பணி தொடக்க விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி கரை மேம்படுத்துதல், அங்கன்வாடி பழுதுபார்த்தல், சிமெண்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக ஆரியங்காவூர் ஊருணி மேம்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு யூனியன் துணை சேர்மன் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.