மலைப்பாதை ரூ.3½ கோடியில் சீரமைப்பு
மருதமலையில் 17 வளைவுகள் கொண்ட மலைப்பாதை ரூ.3½ கோடியில் சீரமைக்கப்படுகிறது. தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மருதமலையில் 17 வளைவுகள் கொண்ட மலைப்பாதை ரூ.3½ கோடியில் சீரமைக்கப்படுகிறது. தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
7-வது படை வீடு
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிர மணிய சுவாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
எனவே பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை இந்து சமய அற நிலைய துறை செய்து வருகிறது. அதில் குறிப்பாக மருதமலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு வாகனங்களில் செல்ல மலைப்பாதை உள்ளது. மேலும் மலைக்கு மேல் கூடுதல் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கோவிலின் மேல் பகுதியில் மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகி றது. மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை உள்ள 2.2 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை ரோடு சீரமைக்கப்பட உள்ளது.
ரூ.3½ கோடியில் பணிகள்
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
மலைக்கு மேல் கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மண்சரிவை தடுக்கும் வகையில் 15 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு கூடுதல் வாகனங்களை நிறுத்த முடியும்.
மலை அடிவாரம் முதல் கோவில் வரை மொத்தம் 2.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைப்பாதை உள்ளது.
அது தற்போது சேதமடைந்து காணப்படு கிறது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதை மற்றும் தடுப்புச்சுவர் ரூ.3½ கோடியில் சீரமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.