திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-02 18:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் முருகேசன் (வயது 24). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பிலிமிசை கிராமத்திற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில் முருகேசனின் பெற்றோர் இறந்ததால் அவர் தனிமையில் இருந்து வந்ததாகவும், திருமணமாகாத ஏக்கத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்