குஜிலியம்பாறையில் ஆற்றில் ஆண் பிணம்

குஜிலியம்பாறையில் ஆற்றில் ஆண் பிணம் மிதந்தது.

Update: 2022-11-08 15:23 GMT

குஜிலியம்பாறை போலீஸ் நிலையம் அருகே வரட்டாறு உள்ளது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்