மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதி பகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குஞ்சிதபாதம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற குழுத் தலைவர் லட்சுமணன், தலைமை பொது செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சுகுமார் வரவேற்றார். மாநில தலைவர் மணிநந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.