ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-24 17:31 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். தலைவர் ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன், அமைப்புக்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், ஜான்பாஷா, ராமலிங்கம், நாகராஜன், செல்லமுத்து, சீத்தாராமன், செயலாளர் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்