இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின்மாவட்ட பேரவை கூட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட பேரவை கூட்டம் தேனியில் நடந்தது.

Update: 2023-04-01 18:45 GMT

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட பேரவை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தை மாநில தலைவர் சங்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் விசாகன் அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி புதிய மாவட்ட செயலாளராக பெத்தாட்சி ஆசாத் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், தேனி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள சுற்றுலா இடங்களை மேம்படுத்த வேண்டும். தேனி அல்லிநகரம் வருவாய் கிராமத்தை 2 ஆக பிரிக்க வேண்டும். சின்னமனூரை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும். தேனி மீறு சமுத்திரம் கண்மாயை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்