தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக தெருமுனை பிரசாரம்

தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டன.;

Update: 2023-08-06 18:30 GMT

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பிரசார இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், ரோவர் ஆர்ச், எசனை ஆகிய பகுதிகளில் பெருந்திரள் அமர்வு போராட்டம் குறித்து பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்