குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-09-12 18:53 GMT

காரியாபட்டி,

ஆவியூர் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தண்ணீர் வசதி இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் காரியாபட்டி யூனியன் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிதண்ணீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ரவி, ஒன்றிய கவுன்சிலர் சிதம்பரபாரதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆவியூர் கிராமம் சென்று உடனடியாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்