தமிழ்நாட்டில் நேச்சுரோபதி, யோகா பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை - மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே உறுதி
யோகா மற்றும் நேச்சுரோபதி கவுன்சில் அமைக்க ஆயுஷ் அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற தேசிய இயற்கை மற்றும் யோகா மருத்துவ மாநாட்டில் மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொல்லிமலை போன்ற மூலிகை சார்ந்த பகுதியாக நாமக்கல் இருப்பதால், மருத்துவ சுற்றுலா துறையில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் நேச்சுரோபதி மற்றும் யோகா மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும், தேசிய யோகா மற்றும் நேச்சுரோபதி கவுன்சில் அமைக்கவும் ஆயுஷ் அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.