தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடிக்கு இன்று காலை செல்லும் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.;

Update: 2023-12-26 03:08 GMT

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி, விமானம் மூலம் சென்னைக்கு நிர்மலா சீதாராமன் நேற்று இரவு வந்தடைந்தார்.

தூத்துக்குடிக்கு இன்று காலை செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அந்தோணியார் பாளையத்தில் ஏற்பட்டுள்ள சாலை சேதம், கோரம்பள்ளம் குளம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்