முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் சந்திப்பு

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை முதல்-அமைச்சரிடம் பூபேந்திர யாதவ் வழங்கினார்.;

Update: 2023-07-14 10:09 GMT

சென்னை,

மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் கோவலம் பகுதியில் மத்திய அரசின் சதுப்புநில தோட்டம் தொடர்பான மிஷ்டி (MISHTI) திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த பூபேந்திர யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை முதல்-அமைச்சரிடம் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் வழங்கினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்