தேவகோட்டை யூனியன் கூட்டம்

தேவகோட்டை யூனியன் கூட்டம் நடைபெற்றது;

Update: 2023-05-26 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை யூனியன் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மேலாளர் ஜோதிநாதன், யூனியன் என்ஜினீயா் திருமேனிநாதன், ஜோசப், இளநிலை பொறியாளர் மஞ்சுபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியனில் தான் அதிக அளவில் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன. தமிழக அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.9 கோடிக்கு சாலைகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடிக்கு பாலங்கள் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும் என கூறினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் கோாிக்கைகள் குறித்து விவாதம் செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்