யூனியன் கூட்டம்

கடையநல்லூர் யூனியன் கூட்டம் நடந்தது

Update: 2022-08-26 18:12 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி, பொறியாளர்கள் சுப்பிரமணியன், ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைவர் சுப்பம்மாள் பேசும்போது, யூனியனில் தற்போது ரூ.60 லட்சம் இருப்பு உள்ளது. எந்தெந்த வார்டு உறுப்பினர்கள் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவர்கள் மதிப்பீடு தயார் செய்து கொடுக்கலாம், என்று கேட்டுக்கொண்டார்.

துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ் பேசும்போது, கோழிப் பண்ணைகள், பிளாஸ்டிக் கம்பெனிகள் உரிய அனுமதி இன்றி செயல்படுவதாக தெரிகிறது. எனவே அந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குலையனேரி, புன்னையாபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், காசிதர்மம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்