காசியில் பாரதியார் சிலைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மரியாதை

காசியின் பாரதியாரின் உறவினர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.;

Update:2022-12-03 18:59 IST

லக்னோ,

தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய மற்றும் கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரணாசிக்கு சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அங்குள்ள அனுமன் கட் பகுதியில் பாரதியாரின் இல்லத்தை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள பாரதியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அவர், பாரதியாரின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து குமாரசாமி மடத்தில் உள்ள கவுரி கேதாரேஷ்வர் ஆலயத்திற்கு சென்ற அவர், பூஜை செய்து வழிபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்