கம்மாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா

கம்மாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2022-09-06 16:49 GMT

விருத்தாசலம், 

கம்மாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் கோட்டேரி பழனி.சுரேஷ் - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சுரேஷ் தம்பதியரின் மகள் இன்பரசிக்கு புதுக்கூரைப்பேட்டை கே.பி.எம். வாசகன் மஹாலில் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு இன்பரசியை வாழ்த்தினார். இதேபோல் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் தண்டபாணி, நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, அரங்க. பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் விருத்தாசலம் கனக.கோவிந்தசாமி, வேல்முருகன், நல்லூர் பாவாடை கோவிந்தசாமி, திருநாவலூர் வசந்தவேல், மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி. சாமி, தொ.மு.ச. தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, கோட்டேரி தி.மு.க. கிளை நிர்வாகிகள், கம்மாபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டு இன்பரசியை வாழ்த்தினா். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் சுரேஷ்-வசந்தி தம்பதியர் வரவேற்று உபசரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்