அங்கன்வாடி மையத்தை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
சின்னசேலம் அருகே அங்கன்வாடி மையத்தை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
சின்னசேலம்
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தென்சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகள் வருகை பதிவேடு, பராமரிப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்ட அவர் குழந்தைகளுக்கு வழங்கும் முட்டை மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் பொருள் வைப்பு அறையில் அரிசி, பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பு விவரத்தை கேட்டறிந்த அவர் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறு அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) குமரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.