ஒன்றியக்குழு கூட்டம்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-04-06 17:03 GMT

ஆரணி

ஆரணி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வி.திலகவதி வரவேற்றார்.

கூட்டத்தில் கரிப்பூர் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளிக்கு மேற்கூரை மற்றும் கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த ரூ.50 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்வது,

கலெக்டரின் உத்தரவின்படி ஆகாரம், காமக்கூர், கொளத்தூர், காட்டுக்காநல்லூர், முருகமங்கலம், மேல்நகர், 5 புத்தூர், புதுப்பாளையம், ஐய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் சம்பந்தமாக நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சவிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்