தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம்
தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், துணை தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு வரவேற்றார்.
ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பணிகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்களை சீரமைப்பது உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பது, மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சந்திரசேகரன், பூமா, செல்வராஜ், லோகேஸ்வரி, சுதாகர், சங்கர், அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.