வளர்ச்சி பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
வளர்ச்சி பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
அம்மாப்பேட்டை ஒன்றியம், விழிதியூர் ஊராட்சியில் பஞ்சாயத்து செயலகம், வடிகால் மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கே. வீ. கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர்தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மின் மோட்டார் பழுதடைந்துள்ளதாகவும் மாற்று ஏற்பாடு செய்து தரும்படி ஊராட்சி தலைவர் கலையரசி கோவிந்தராஜன், ஒன்றியக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது உடனடியாக புதிய மோட்டார் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக்கழு தலைவர் உறுதி அளித்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் உள்பட அரசு அலுவலர்கள் இருந்தனர்.