அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Update: 2022-06-29 15:48 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேடு பஸ் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வைரக்கண்ணு கொடுத்த தகவலின்பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்