அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்

திருச்சிற்றம்பலம் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி பிணமாக கிடந்தார்.

Update: 2023-04-21 20:13 GMT

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு கடை வீதியில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த மூதாட்டி பச்சை நிறத்தில் சேலையும், சிவப்பு,வெள்ளை, கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட மேல் சட்டையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்