சுகாதாரமற்ற அரசு பள்ளி கழிப்றை

பாணாவரத்தில் சுகாதாரமற்ற அரசு பள்ளி கழிப்றையை சுத்தம்செய்ய நடவடிக்கை எடுக்கபெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-26 14:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருவதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறை செல்லவே சிரமப்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தொற்று பரவுவதற்கு முன்னர் கழிவறையை சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்