உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்..சுமங்கலா ஸ்டீல்ஸ் ஸ்காலர்ஷிப் திட்டம்
கல்வி தொடர்பாக 'உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர், எனும் திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.;
ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் முன்னேறுவதற்காக அரசும் தனியார் நிறுவனங்களும் போதுமான ஊக்கத்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கி அவர்களின் கல்வியை ஊக்குவிக்கின்றனர். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் டிஎம்டி கம்பிகளை உருவாக்கி விற்பனை செய்யும் சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின்(CSR) கீழ் பிரத்தியேகமான ஸ்காலர்ஷிப்பை வழங்கி வருகின்றனர்.
கல்வி தொடர்பாக 'உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர், எனும் திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. நன்கு படிக்கின்ற பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படிப்பதற்கு இவர்கள் வழங்கும் ஸ்காலர்ஷிப் பெரிதும் உதவியாக இருக்கிறது. சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனம் தாங்கள் அடைந்த பலனை சமூகத்திற்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியும், மற்றும் நல்ல தரமான கல்விக்கு உதவுவதன் மூலம் வறுமை சூழலை மாற்ற முடியும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஸ்காலர்ஷிப் திட்டம்;-
மாணவர்கள் ஊக்கத் தொகை பெற இவர்களின் இணையதளம் www.sumangalasteel.in மூலம் தொடர்பு கொள்ளலாம். 1 டிப்ளமோ (Diploma)படிப்பு படிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப் (Engineering) படிப்பதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் 65% இருக்க வேண்டும்.
2. ஸ்காலர்ஷிப்புக்கு அணுகும் மாணவர்களின் தாய் அல்லது தந்தை கட்டுமான துறை சார்ந்த பணியாளராகவோ கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் துறை சார்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.
3. குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூபாய் 4,20,000/- தை மீகாமல் இருக்க வேண்டும்.
4. ஏற்கனவே பொறியியல் டிப்ளமோ படிப்பு படித்து தற்போது பிஇ இரண்டாம் ஆண்டு சேர முயல்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட மாட்டாது.
5. மாணவர்கள் பத்தாவது , பன்னிரண்டாவது தமிழ்நாடு அல்லது பாண்டிச்சேரியில் படித்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
6. மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
மாணவர்கள் மேற்படி சுமங்கலா ஸ்டீல் நிறுவன இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் போதுமான சான்றிதழ்களுடன் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தை ஜூன் 28க்குள் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்வு செய்யும் முறை:-
போதுமான தகுதியுடன் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்களை அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
அவ்வாறு அதிர்ஷ்டக் குழுக்களில் பெயர் வந்தவர்களின் தகுதி பரிசீலனை செய்யப்பட்டு அந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.
குறிப்பு:- தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள கல்லூரிகளில் அரசு கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்க வேண்டும்.
அரசு பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகள்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்விக் கூடங்கள்.
ஸ்காலர்ஷிப் வழங்கும் முறை.
அதிர்ஷ்ட குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தன்னுடைய கல்லூரி சேர்க்கை கடிதத்தை கல்வி கட்டண விவரத்தோடு சுமங்கலா ஸ்டீல் நிறுவன மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். Scholarship@sumangalasteel.in
கல்வி கட்டணம் மட்டுமே ஸ்காலர்ஷிப் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். ஓராண்டுக்கு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சமும் டிப்ளமோ(Diploma) படிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் வழங்கப்படும்.
ஊக்கத்தொகையாக வழங்கப்படும் கல்வி கட்டணம் சுமங்கலா ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நேரடியாக குறிப்பிட்ட கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் அளிக்கப்படும்.