பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.