பெரிய மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பெரிய மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் நல்லான்குத்தகை பகுதியில் அமைந்துள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், அபிஷேக-ஆராதனைகளும் நடந்தது. நேற்று கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் பக்தர்களுக்கு ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.