தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக நீலகிரியின் 'உல்லாடா' கிராமம் தேர்வு
தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ‘உல்லாடா’ கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி,
தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமத்தை தேர்வு செய்வதற்கான போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த போட்டிக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான போட்டியில் தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள 'உல்லாடா' கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.