உகாண்டா பெண்ணிடம் சிக்கிய 3 கிலோ போதைப் பொருள்; சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டு பெண்ணிடம் 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, உகாண்டா நாட்டைச் சேர்ந்த நம்பீரா நோலின் என்ற பெண்ணை சோதனை செய்த போது, அவரிடமிருந்து 3 கிலோ 200 கிராம் எடை கொண்டு போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு எட்டு கோடியே 3 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
கடத்தலில் ஈடுபட்ட உகாண்டா பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.