ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக உடுமலை ரெயில்நிலையத்தில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது ேமலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்தார்.
கூடுதல் பொது ேமலாளர்ஆய்வு
ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரெயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதுடன் படுகாயமும் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தக்கோர விபத்தைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப்பணிகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தென்னக ரெயில்வே சார்பில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தென்னக ெரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நேற்று உடுமலை ெரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிக்னல்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? என்றும் ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.
இருக்கைகள்
பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம், டிக்கெட்டுகள் வழங்குவதையும் ஆய்வு செய்தார்.அத்துடன் பயணிகளிடம் ரெயில் நிலைய சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
அப்போது பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டனர். இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனு
அப்போது உடுமலைமற்றும் பொள்ளாச்சி பயணிகள் ெரயில் நலச்சங்கங்கள் சார்பில் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் உடுமலை வழியாக கோவை, திருச்சி, சென்னை செல்வதற்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். அதே போன்று உடுமலை-மதுரை வழியாக மேட்டுப்பாளையம், தூத்துக்குடிக்கு செல்வதற்கு ரெயில்கள் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரெயில் பாதையில் மீட்டர்கேஜ் ரெயில்கள் இயக்கிய போது இருந்த கோவில்பாளையம் ெரயில் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும். உடுமலை உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை ெரயில்வே துறையிடம் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது. மனுவைப்பெற்றுக் கொண்ட ரெயில்வே அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.