உடுமலை குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி

Update: 2023-08-17 17:24 GMT


திருப்பூர் மாவட்டம் உடுமலை குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி காரத்தொழுவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் மடத்துக்குளத்தில் உள்ள ஜே.எஸ்.ஆர். கல்விக்குழு வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஜே.எஸ்.ஆர்.கல்விக்குழுமங்களின் நிறுவனர் சி.சண்முகவேலு தலைமை தாங்கினார்.

விழாவில் காரத்தொழுவு, மடத்துக்குளம், சோழமாதேவி, கடத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அருள்முருகன், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜே.எஸ்.ஆர்.கல்விக்குழுமங்களின் தாளாளர் எஸ்.ராஜ்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்