உத்வாகநாத சாமி கோவில் மாசிமக தீர்த்தவாரி

திருமணஞ்சேரி உத்வாகநாதசாமி கோவில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Update: 2023-03-06 18:45 GMT

குத்தாலம்:

திருமணஞ்சேரி உத்வாகநாதசாமி கோவில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மாசிமக திருவிழா

குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கிராமத்தில் உத்வாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர விழா, தேரோட்டம் நடந்து முடிந்துள்ளது.

தீர்த்தவாரி

விழாவின் 10-ம் நாளான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக நடராஜர் ருத்ரபார தீர்த்தமும், மதியம் கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விக்ரமன் ஆற்றங்கரையில் எழுந்தருளினர்.

அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் ஆஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆற்றில் புனித நீராடிசாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்