உடன்குடி வைத்திலிங்கபுரம்உச்சினிமாகாளி கோவிலில்1,008 திருவிளக்கு வழிபாடு

உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி கோவிலில் 1,008 திருவிளக்கு வழிபாடு நடந்தது.

Update: 2023-08-09 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்பாள், பட்டரை அம்பாள் கோவில் வருடாந்திர கொடை விழா ஆக.7-ந்தேதி தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு 1,008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. விழா நாட்கிளில் மோகனசுந்தரம் சமைய சொற்பொழிவு, அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, அம்பாள் திருக்கும்பத்தில் பவனி, உடன்குடி கீழ பஜார் கண்டுகொண்ட விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் வான வேடிக்கையுடன் பஜார் வழியாக பால்குட ஊர்வலம் நடந்தது. அம்பாளுக்கு வெள்ளி அங்கி அணிதல், அலங்காரத்துடன் மகாதீபாராதனை, ஊர்பெண்கள் காணிக்கை, நேர்த்திக்கடன் செலுத்துதல் நடந்தது. அம்பாள் பூ அலங்கார சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலையில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், அம்பாள் திருக்கும்பத்தில் மஞ்சள் நீராடுதல், வரிபிரசாதம் வழங்கல் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்